வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

எது எனக்கு பிடிக்குமுன்னு
யார் என்ன கேட்டாலும்
படக்குன்னு சொல்லிடுவேன்
பாட்டுதான் பிடிக்குமுன்னு

பாட்டும் பிடிக்கலையே
பாவிமக நெனப்பால,
பைத்தியந்தான் பிடிக்குமுன்னு
பழகினவங்க சொன்னாங்க,

அத்தோட விடாம அடுத்தும் சொன்னாங்க
இத்தோட எங்க நெனப்பு இருக்குமா
உன் மண்டைல
கிறுக்கி அவ நெனப்பு
உனக்குள்ள
கிறு கிறுன்னு சுத்தயில
அனைத்தும் நீதானடி கண்மணி
இருந்தும் போனை 
அணைத்தது ஏனோ சொல்லடி

தவிக்குது என் மனம் போடி
இனி இந்த தவறே செய்யாதடி தோழி

காதல் பிசாசு நீ 
காவல் தெய்வம் செல்போன்
அதற்கு பசிக்காமல் படையல் வைப்பது 
காதலர்தம் கடமையடி

புதன், 11 ஜூன், 2014



பாலைவனச் சோலை 


பாலைப்போல குளிர்ந்த 


என் கண்கள்


பாலைவனம் கண்டு சூடானது 


சோலைத்தெடி நீரானது; 



காட்சியின்றி காய்ந்த கண்கள் 


கானல் நீரே கண்டது,



சோலை என்றால் 


நீரோடு நிழலும் உள்ள 


இளைப்பாறும் இடம் 


மட்டும் அல்ல, 



ஊரோடு உறவும், 


உற்றாரோடு பெற்றோரும், 




வீட்டோடு விடியலும்,

விடிய விரும்பா இரவும், 


நலம் விரும்பும் நண்பனும், 


புலத்தரும்பும்  வாடையும், 


சிறிதாக ஊடலும், 


பெரிதாக காதலும், 


கொண்டிருக்கும், 


வேளையே சோலை.



   


எரிக்கும் வெய்யிலில் 

எரியும் என்னை 

தெரிக்கும் துளியில் 

அணைத்த மழை 


பத்து விரலும் ,பாதமும் 

மரத்துப்போச்சு 

பாட்டும் பசியும் கூட 

மறந்து போச்சு.





செவ்வாய், 5 நவம்பர், 2013


தலை தீபாவளி 

தலை தீபாவளி  அக்காவிற்கு,
வரமுடியாத அவளுக்கு தொலைபேசியிலாவது ,
வாழ்த்துகூறு என்று கடிந்தனர் 
அம்மா உட்பட அனைவரும்,

எனக்கு புரியவில்லை 
வராத "தீபாவளிக்கு" வாழ்த்தெப்படி கூறுவது ? 

அவள் வராது போனதால் தீபாவளி   
வந்து  போனதே தெரியவில்லை 
கொண்டாட்டம் எல்லாம் குறைந்து போனது 
என் நாட்டமெல்லாம் அவள் நினைவோடு கரைந்துபோனது 

இனிமையான நாளில் தனிமையாய் உணர்ந்தேன் 
விழா நாள் என்ற எண்ணமே எழாமல் போனது.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

சுமையான இமை, சுகமான சுமை.



கனநேரப் பார்வையில்

கண்ணுக்குள் விழுந்தாய்,

இமைகொண்டு தடுத்தும்,

இயலவில்லை நுழைந்தாய்,


தடுத்த இமைகூடத்

தடம் மாறிப்போனது

திறக்க மனமின்றி,

தினம் மூடிக்கிடந்தது


சுமையான இமை,

சுகமான சுமை.



உனக்கும் எனக்கும் ஊடல்,

"கருந்தோழி" கதைத்தாள்

ஊடலை உடைத்தாள்,

உனக்காக தூதுவந்த திரளான

உன் கூந்தல் எனை

தீண்டிச்  சொல்லியது

தீண்டாமை ஒரு பாவச்செயல் !

பேசாமை ஒரு பெருங்குற்றமென்று !